நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களில் உள்ள சகல தமிழ் மொழிமூலமான பாடசாலைகளையும் நாளைய தினம் (12ஆம் திகதி) மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக, நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாச, நேற்று (11) தெரிவித்துள்ளார். “நோர்வூட் பொது விளையாட்டு மைதானத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, உரையாற்றவுள்ள நிகழ்வில் கலந்துகொள்ள மாணவர்களுக்கு வாய்ப்பினை ஏற்படுத்துவதற்காக இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளது. நாளைய தினம் மூடப்பட்டிருக்கும் சகல பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமை திறக்கப்படும்” என்றார்


Post a Comment
Post a Comment