வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள இளைஞர் யுவதிகளுக்கு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க சர்வதேச நாடுகளின் அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
அம்பாறை – ஆலையடிவேம்பு கலாசார மத்திய நிலையத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் இம்முறை நடைபெறுகின்றது.
தமக்கு அரசியல் தீர்வொன்று அவசியம் எனவும், அந்த சந்தர்ப்பத்தை தவர விட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Post a Comment
Post a Comment