களுத்துறை விவகாரம்: அத்தியட்சகருக்கு இடமாற்றம்



களுத்துறையில் சிறைச்சாலை பஸ்கள் இரண்டின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில், களுத்துறை சிறைச்சாலை அத்தியட்சகருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கி, முறையான விசாரணையொன்றை நடத்துமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சு வாமிநாதன் கட்டளையிட்டுள்ளார். 

தனது அமைச்சின் செயலானர் டப்ளியு.எம்.பி.ஜி. விக்ரமசிங்கவுக்கே மேற்கண்டவாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.  மேற்படி தீர்மானத்தை எடுக்கும் போது பின்வரும் விடயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.  

 1. 2017 பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி களுத்துறையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்ட 3 பேரடங்கிய குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்கள்.  
2 அண்மையில் ஊடகங்கள் வாயிலாக பரப்பீடு செய்யப்பட்ட சமயங் என்பவரின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புள்ள சந்தேகநபர் ஒருவர் மீது சிறைச்சாலையினுள் தாக்குதல் நடத்தியமை. 

 3 களுத்துறை சிறைச்சாலை சமையலறைக்கு விநியோகிக்கபட்ட கோவாவினுள் அலைபேசியொன்றும் புகையிலையும் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம்.   பிரஸ்தாப சம்பவங்கள் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் குற்றவாளிகளாகக் காணப்படும் பட்சத்தில், அவர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனை பெற்றுக்கொடுக்கப்படுமென இங்கு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.