தேசிய வைத்தியசாலை, ஐ.டி.எச். வைத்தியசாலை, ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை உள்ளிட்ட பிரதான வைத்திய சாலைகளில் தங்கியிருந்து சிகிச்சைபெறும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த வருடத்தில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்ட 90 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40,000 இற்கும் அதிகமானவர்கள் சிகிச்சை பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை டெங்கு காய்ச்சலால் மற்றுமொரு குழந்தை தாயின் அரவணைப்பை இழக்க நேரிட்டுள்ளது.
களனி – மானெல்கம பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நதீகா மதுஷானி ஒரு பிள்ளையின் தாயாவார்.
டெங்குக் காங்ச்சலால் பீடிக்கப்பட்ட அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (06) உயிரிழந்தார்
11 மாதங்களேயான மதுஷானியின் குழந்தை இன்று தாயின் அரவணைப்பை இழந்துள்ளது.
கடந்த 05 மாத காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் 9,278 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 5,485 பேரும் திருகோணமலையில் 4095 டெங்கு நோயாளர்களும் பதவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த 05 மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை 42,141 ஆகும்
டெங்கு நோயாளர்களில் 40.89 வீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் மாத்திரம் 250 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுகின்றனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் 150 டெங்கு நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதுடன் களுபோவில போதனா வைத்தியசாலையில் 140 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.
இதேவேளை, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 90 இற்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சைப் பெறுவதாக வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சிரில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
மேலும் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டவர்கள் என்ற சந்தேகநத்தில் நாளொன்றுக்கு 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.


Post a Comment
Post a Comment