பணிப் பகிஸ்கரிப்பும் பணிகளும்



தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30 தொழிற்சங்கங்கள்  (05) ஒரு நாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுகின்றனர்.
சுகாதாரம், கல்வி, போக்குவரத்து உள்ளிட்ட பல துறைகளின் தொழிற்சங்கங்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதுடன், பெற்றோலியம், மின்சக்தி மற்றும் தபால் துறையைச் சேர்ந்தவர்களும் ஒரு மணித்தியால எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதேவேளை, சில சங்கங்கள் பணிப் பகிஸ்கரிப்பில் தாம் ஈடுபடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதுடன் அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுத்தும் வருகின்றனர்.