வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் அனைத்து உணவுப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்கள் குறித்து ஒரு முறையான ஆய்வை செய்து நாட்டுக்கு பொருத்தமானவற்றை மட்டும் கொண்டுவருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்ற கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
2017 ஆம் ஆண்டில் நாட்டை வறுமையிலிருந்து விடுவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் முக்கிய அம்சமாக இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2020 ஆம் ஆண்டாகும்போது 15,000 கிராமங்களில் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவேற்ற இதனூடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு மேலும் உரையாற்றியுள்ள ஜனாதிபதி, வசதிபடைத்தவர்களின் செல்வங்கள் வசதி இல்லாதவர்களுக்கிடையே பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டை நிர்வகிக்க வேண்டியது மத்திய வர்க்கத்தினரேயன்றி செல்வந்தர்கள் அல்ல என தான் நம்புவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
அதேவேளை இதனை வெற்றிபெறச் செய்யும் தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்கு கட்சி, நிற பேதங்களின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment