(க.கிஷாந்தன்)
இந்தியாவில் மாருதி சுசூகி வாகன நிறுவனத்தில் பணியாற்றும் 18 தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கியிருப்பது தொடர்பில் அவர்களை விடுதலை செய்ய கோரி அழுத்தம் கொடுத்து அட்டன் நகரில் சோசலிச சமத்துவக் கட்சி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
சுமார் 25 பேரினால் நடத்தப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் அட்டன் பஸ் தரிப்படத்தின் ஆலமர சந்தியில் பாதையின் ஒரு புரத்தில் ஆர்ப்பாட்டத்தை 21.05.2017 அன்று மதியம் முன்னெடுத்தனர்.
இதன்போது இந்தியாவில் மாருதி சுசூகி நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களை உடனடியாக அவர்களுக்கு கொடுத்திருக்கும் தண்டனையிலிருந்து விடுதலை செய்ய அழுத்தம் கொடுக்கும் வாசகங்களை எழுதிய பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டகாரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


Post a Comment
Post a Comment