அக்கரைப்பற்று ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலில் 2012 ம் ஆண்டு அளவில் நிறுவப்பட்ட “தாறுல் ஹப்ளா” குர்ஆன் மனன மத்ரஸாவின் முதற்பட்டமளிப்பு விழா இன்று மாலை தொடக்கம் அக்கரைப்பறு ஜூம்ஆ பெரிய பள்ளிவாயல் வளாகத்தில் மிகசிறப்புடன் இடம்பெற்றுக் கொன்டிருக்கின்றது.
இன்று பட்டம் பெற இருக்கும் ஹாபிழ்களை இன்று மாலை,அக்கரைப்பற்று மாநகரரெங்கும் ஊர்வலமாய் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்த விழாவினுடைய பிரதம அதிதிகளாக கண்டி அல்-ஹக்கானிய்யா அறபுக் கலாசலையினுடைய அதிபர் அஷ்.ஷெய்க் லபீர் முர்ஷி மற்றும் அப் பள்ளிவாயலினுடைய முன்னால் கெளரவ தலைவரும், இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமும், இம் மத்ரஸாவினுடைய ஸ்தாபகருமான,சிரேஷ்ட பொறியியலாளர். எஸ்.எல்.எம்.அலியார் அவர்களும் கலந்து சிறப்பிக்கிறனர்.
அத்துடன் இன்றைய பட்டமளிப்பு விழாவின் இறுதியில் 04 மாணவர்கள் “அல்-ஹாபிழ்” பட்டம் பெற இருப்பதுடன்,இவர்களை பயிற்று வித்த அல் ஹாபிழ் றியாஸ்தீன் அவர்களுக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்


Post a Comment
Post a Comment