கிழக்கின் காத்தான்குடியில், பேரீச்சம் மரங்கள் காய்த்துக் குலுங்குவதை அவதானிக்க முடிகின்றது.
இம்முறை ஏற்பட்டுள்ள கடுமையான வெப்பநிலை காரணமாக பேரீச்சம் மரங்கள் அதிகளவில் காயத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காத்தான்குடி பிராதான வீதியில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் முயற்சியினால் நடப்பட்டுள்ள 70 ஈச்சமரங்களில் சுமார் 25 மரங்கள் இவ்வாறு காய்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த பேரீச்சம் மரங்களைக் காண உள்நாட்டு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், காத்தான்குடிக்கு அதிகளவில் வருகை தருவது குறிப்பிடத்தக்கது.
இம்மாத இறுதியில் ஆரம்பமாகும் புனித றமழான் காலத்தில் குறித்த பேரீச்சம் பழங்களின் அறுவடை இடம்பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment