ஜனாதிபதி தலைமையில் தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள்



தேசிய இராணுவ வீரர்கள் நினைவு தின நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வுகள் பாராளுமன்ற கட்டடத் தொகுதிக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ நினைவுத் தூபி வளாகத்தில் நடைபெற்றன.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரிகள், இராணுவ வீரர்களின் உறவினர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த இராணுவ வீரர்களை நினைவுகூர்ந்து சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்த இராணுவ வீரர்களின் உறவினர்களும் தமது உறவுகளுக்கு மலரஞ்சலி செலுத்தினர்.