அக்கரைப்பற்றின் வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூரை வரவேற்கின்றோம்



அக்கரைப்பற்று வலையக் கல்வி பணிப்பாளராக,மூதுார் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் மன்சூர் கடமைப் பொறுப்பேற்றுள்ளார். அவரது சேவையினை,அக்கரைப்பற்று உயிரியல் விஞ்ஞான பீட மாணவர்கள் கடந்த காலங்களில் பெற்று வைத்தியர்களாக வெளியேறியுள்ளனர்.

தமது தனிப்பட்ட விருப்பு, வெறுப்பக்கள்,நிகழ்ச்சி நிரல்களுக்கு அப்பால்,அவரது ஆளுமை,கல்வி நிருவாகத் திறைனைப் பெற்று மாணவர்களின் அடைவு மட்டங்களை உயர்த்த வேண்டிய பாரிய பணி, அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஏனைய உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கல்வி அதிகாரிகள்,  அதிபர் ஆசிரியர் குழாமையும் சேருகின்றது. 

வெறுமனே படிப்புக் கடைகளிலும், தமது பிரத்தியேக நுால் வெளியீடுகளின் முலமாகவும் மாணவர்களைச் சுரண்டும்  ஆசிரியர்களுக்கும், பாட வேளையினைப் புறக்கணித்து,தமது தனிப்பட்ட கடமைகளில் மாத்திரம் கரிசனை காட்டும்,ஆசிரியர்களுக்கும், மன்சூர் சேரினது வருகை சற்று கசப்பாக இருக்கலாம்.

பெற்றோர்கள், நலன் விரும்பிகள், அபிவிருத்திச் சங்கம், முகாமைத்துவ சபை, ஆகியவற்றின் ஒத்துழைப்புடன்,இவற்றை வெற்றிகரமாக நகர்வாக மாற்றுவது அக்கரைப்பற்று புதிய வலயக் கல்விப் பணிப்பாளரில் தங்கியுள்ளது.

வாழ்த்துக்கள் #CEYLON24