மே தின பேரணிக்காக மக்களை ஏற்றிச் சென்ற பஸ்ஸிலிருந்து கீழே விழுந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு - கெம்பல் மைதானத்தில் இடம்பெற்ற மே தினப் பேரணிக்காக மக்களை ஏற்றிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று இன்று அதிகாலை 02.00 மணியளவில் சிகிரியா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தது.
இந்தநிலையில், பஸ்ஸின் மிதி பலகையில் இருந்து விழுந்து பின் சக்கரத்தில் சிக்குண்டு ஒருவர் படுகாயடைந்துள்ளார்.
இதனையடுத்து, சிகிரியா பகுதியைச் சேர்ந்த 44 வயதான அவர், தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை, பஸ்ஸின் சாரதி சிகிரியா பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதுஇவ்வாறு இருக்க, காலிமுகத்திடலில் இடம்பெற்ற மே தினப் பேரணியில் பங்கேற்கச் சென்ற ஒருவர் பஸ்ஸில் இருந்து விழுந்து காயமடைந்துள்ளார்.
கோட்டை - ஒல்கட் மாவத்தை பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமடைந்த அவரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Post a Comment
Post a Comment