சிலாபம் கடற்பிரதேசத்தில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த யுவதியொருவர் கடல் அலையால் தாக்கப்பட்டு கடலில் வீழ்ந்து காணாமல் போயுள்ளார்.
நேற்று (01) மாலை 5.10 அளவில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
சிலாபம் இலிப்பதெணிய- கிழக்கு முங்கத்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான டில்கி ஷிகாரா பிஸ்மத் என்ற யுவதியே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல் போன யுவதி தனது குடும்பத்தினருடன் சிலாபம் கடற்பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தவர் என தெரியவந்துள்ளது.
சிலாபம் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள கடற்பகுதியில் அவர்கள் புகைப்படம் எடுத்து நின்ற போது திடீரென ஏற்பட்ட பாரிய கடல் அலையால் குறித்த பெண் இழுத்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment
Post a Comment