மட்டக்களப்பு சித்தாண்டி சந்தணமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய பிரதேசத்தில் மேற்கொண்டுவந்த வர்த்தகப் பழச்செய்கை இந்தமுறை அதிக விளைச்சலை பெற்றுக் கொடுத்துள்ளதாக பழச் செய்கையில் ஈடுபடும் விவசாயியான கிருஸ்ணப்பிள்ளை பாக்கியராசா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நிலவிவரும் வரட்சியான காலநிலை காரணமாக வெள்ளரிப்பழம், வர்த்தகப்பழம், இளநீர், பழச்சாறு குடிபானம் என்பனவற்றுக்கான கேள்வி மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.
வர்த்தகப் பழத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சுமார் ஒரு ஏக்கர் நிலப் பரப்பளவில் வர்த்தகப் பழச் செய்கையை இம்முறை மேற்கொண்டு வருகின்றேன்.
குறித்த வர்த்தகப் பழச் செய்கையினால் போதிய நீர் இல்லாமை, பக்றீயா, பங்கசு தாக்கம் போன்ற பிரச்சினைகள் இருப்பதுடன் போதிய அறிவு மற்றும் துறைசார் விவசாய அறிவு கிடைக்குமாக இருந்தால் இன்னும் கூடிய விளைச்சலைப் பெற்றுக்கொள்ள முடியும்.
வெளிமாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வர்த்தகப் பழம் சுமார் 85 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதுடன் சுவைகறைவாகவும் நஞ்சு கலந்த பயிர் செய்கையாகவும் உள்ளது.
ஆனால் எனது தோட்டத்தில் நஞ்சற்ற பழம், ஒரு கிலோ 35 ரூபாயாகவும், நல்ல சுவையுடைய இரண்டு இனங்களைக் கொண்ட பழங்களை அறுவடை செய்வதாகவும் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment