சப்புகஸ்கந்த, ஹெய்யந்துடுவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மண் சரிவு வீட்டின் மீது வீழ்ந்துள்ளதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் அதிகபடியாக இரத்தினபுரி மாவட்டத்தில் 196.7 மில்லி மீற்றர் மழை பெய்துள்ளது. அத்துடன் மேல், தென், மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் 150 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது


Post a Comment
Post a Comment