கொழும்பில் தற்போது கடுமையான புயல் காற்றுடன் மழை பெய்து வருகின்றது.
குறிப்பாக மேல் மாகாணத்தில் கடுமையான மழை பெய்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் வீதிகளில் மிக குறுகிய நேரத்துக்குள் நீர் நிறைந்துள்ளமையால் வாகன சாரதிகள் வாகனங்களை செலுத்துவதில் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
நிலவும் சீரற்ற காலநிலையால் மரமொன்று முறிந்து விழுந்ததில் கொழும்பு - லோடஸ் வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பின் சில பாதைகளில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அதிக காற்று மற்றும் மழையால் மரம் முறிந்து விழுந்ததில் இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொழும்பு - டெலிக்கொம் மத்திய நிலையத்திற்கு அருகில், மருதானை டாலி வீதியின் தீயணைப்புப் பிரிவுக்கு அருகில், புறக்கோட்டை - ட்ரக்டர் கூட்டுத்தாபன சந்தி போன்ற பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
எனவே வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.

Post a Comment
Post a Comment