(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)
இறைவன் நாடியவர்கட்கு பதவியைக் கொடுக்கின்றான். நாடியவருடமிருந்து பதவியயை எடுக்கின்றான்.எல்லாம் அவன் செயல் என்பது பிரதி அமைச்சர் பாலித தேவப்பெருமயின் பெருமையில்லாப் பெருந் தன்மை.
இறைவன் நாடியவர்கட்கு பதவியைக் கொடுக்கின்றான். நாடியவருடமிருந்து பதவியயை எடுக்கின்றான்.எல்லாம் அவன் செயல் என்பது பிரதி அமைச்சர் பாலித தேவப்பெருமயின் பெருமையில்லாப் பெருந் தன்மை.
1960 ஆண்டு மே திங்கள் 3இல், களுத்துறையில் பிறந்தவர் இவர், ஜ.தே.க பாராளுமன்ற உறுப்பினரான இவர் தற்போதைய அரசின் உள்விவகார,வயம்ப அபிவிருத்தி அமைச்சராகத் தொழிற்படுகின்றவர்.
மஹிந்த ஆட்சியில். அளுத்கம எரிகின்ற நேரம், அங்கு சென்று தனது வேனில் மக்களைக் காப்பாற்றியவர்.பாடசாலையில் தரம் ஒன்றில் அனுமதி மநுக்கப்பட்ட மாணவிக்காக பள்ளி சென்று போராடி அனுமதி பெற்றுக் கொடுத்தவர். அகலவத்தை பிரதேச அங்கத்தவரை தாக்கி சிறை சென்று மீண்டவர்.
இறுதியாக வெள்ளத்தில் மூழ்கிய அகலவத்தை ஜனாசக்களை மீட்டவர். அனர்த்த உதவிகளை உடலால்,உணிணால்,உதிரத்தால் வியர்வையால் வாக்களித்த மக்களுக்கு நெஞ்சாரப் பணி புரிந்து செஞ்சோற்றுக் கடனை வாக்களித்த மக்களுக்காகத் தீர்த்தவர்.இத்தனை சேவைகளையும் செய்து விட்டு அவற்றை ஊடகங்களில் ஊதிப் பெருக்காதவர்.
தேர்தல் காலத்தில் வாக்குப் பிச்சை கேட்டு வந்து வாயில் படியேறி, பாராளுமன்றம் சென்றவுடன், பக்கத்து வீட்டுக்காரைனையும், வேற்றுக் கிரக வாசியாய்ப் பார்க்கும்,நமது உறுப்பினர்களுக்கு மத்தியில், ஓடுவதற்கு, துவிச்சக்கர வண்டிசுகூட இல்லாமல் வாழ்ந்துவிட்டு, நாடாளுமன்றம் வந்தவுடன், கறுப்புக் குளிருட்டப்ட்ட சொகுசு வாகனக் கண்ணாடியால் மூடி, முகற் குப்புற வைக்கும் எம்மவர்கட்கு் மத்தியில் அந்நியப்பட்டுக் காணப்படும்,’ஆத்மார்த்த நண்பண்.
இன்று,அமைச்சர்,நாளை நானும் சாமானியன் என்ற தாரக மந்திரத்தைக் ஆதார சுருதியாக் கொண்டதால்,மக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகின்றார்.மக்களோ பாலித தேவப் பெருமயினை அவர்களின் தெய்வமாகத் துதிக்கின்றனர்.
பாலித பாரினில் என்றும் வாழ்க வாழியவே!



Post a Comment
Post a Comment