கிண்ணியா பகுதி பாடசாலை வளாகத்தில் அடையாளம் தெரியாத நபர், மாணவர் ஒருவரிடம் இருந்து இரத்த மாதிரியை பெற்றமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த 5ம் திகதி குறித்த மாணவர் விளையாட்டு மைதானத்தில் இருந்த போது, ஒருவர் அவரிடம் இரத்த மாதிரிகளை பெற்றதாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.
காரில் வந்த சிலரே இவ்வாறு தன்னிடம் இரத்த மாதிரியை பெற்றுக் கொண்டதாக, ஆறாம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர், குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த மாணவர் தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சிலர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக, சமூக வலைத் தலங்கள் ஊடாக செய்திகள் பரவி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட சிறுவன் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இதன்படி குறித்த வைத்திய அறிக்கையை கருத்தில் கொண்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Post a Comment
Post a Comment