ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப-தலைவரும் தினகரன் பத்திரிகையின் ஆலோசருமான எம். ஏ. எம். நிலாமின் இளைய மகன் முஹம்மத் றிஷான் (37), நேற்று (11) மாலை காலமானார். இருதய நோயினால் பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி காலமானார். ஜனாஸா நல்லடக்கம், மினுவாங்கொடை கல்லொழுவை முனாஸ்வத்தையிலுள்ள 262/13ஆம் இலக்க இல்லத்திலிருந்து இன்று காலை 10:30க்கு எடுத்துச் செல்லப்பட்டு, கல்வொழுவை ஜும்ஆப்பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.


Post a Comment
Post a Comment