வௌ்ள நீரினால் பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் கட்டமைப்புகளை சுத்திகரிக்கும் பணிகள் இன்று (31) முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இந்த பணிகளில் முப்படையினர் மற்றும் தன்னார்வத் தொண்டு பணியாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர தெரிவித்துள்ளார்.
சுமார் 80 வீதமான நீர் வழங்கல் கட்டமைப்பு வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment