காங்கேயனோடை முகம்மட் மஸ்பிமீது துப்பாக்கிச் சூடு

(விஷேட நிருபர்)
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஆரையம்பதி ஊர்வீதி காங்கேயனோடையில் சந்தியில் வைத்து காங்கேயனோடையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் இன்று (17) புதன்கிழமை மாலை சுடப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
காங்கேயனோடைச் சேர்ந்த முகம்மட் மஸ்பி (வயது 29) எனும் இளைஞர் காங்கேயனோடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியினால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படு காயமடைந்த மஸ்பி என்பவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவருக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் சுற்றி வளைப்பு தேடுதல்களையும் நடாத்தியுள்ளனர்.
குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் கடந்த மாதம் சிலரினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது (வயது 29) எனும் இளைஞர் காங்கேயனோடையிலுள்ள அவரது வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியினால் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதில் படு காயமடைந்த மஸ்பி என்பவர் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
இவருக்கு வயிற்றுப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதியில் சுற்றி வளைப்பு தேடுதல்களையும் நடாத்தியுள்ளனர்.
குறித்த இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் கடந்த மாதம் சிலரினால் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது