(க.கிஷாந்தன்)
தொடரூந்து திணைக்கள சேவையாளர்கள் 05.05.2017 அன்று காலை 8 மணி முதல் 24 மணிநேர பணிப் புறக்கணிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவிருத்திருந்தனர்.
தொடரூந்து சேவை நேர கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் சாரதிகள் இந்த பணிப் புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எவ்வாறாயினும், ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் சாரதிகள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று இலங்கை புகையிரத சேவை கூறியுள்ளது.
05.05.2017 அன்றைய தினம் பணிக்கு சமூகமளிக்காத ஒப்பந்த அடிப்படையிலான புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான சாரதிகள் பணியிலிருந்து நீங்கியதாக கருதப்படுவர் என புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் கூறியுள்ளார்.

எனினும் கொழும்பு பதுளைக்கான புகையிரத சேவை அரை மணித்தியாலம் தாமதமாகியே சேவையில் ஈடுப்படுவதாக அட்டன் புகையிரத நிலைய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Post a Comment
Post a Comment