கடலில் இறங்கி கதறினர்



காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் திருகோணமலை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக உள்ள கடலில் இறங்கி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் இணைந்துகொண்டுள்ளனர்.
ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவின் மனைவியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தங்களின் கோரிக்கைக்கு இதுவரை எவ்வித தீர்வும் கிட்டவில்லை என தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.