வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் 07 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 21 உறுப்பினர்கள் கையொப்பமிட்டு நேற்று இரவு வடமாகாண ஆளுநரிடம் கையளித்தனர்.
இதேவேளை முதலமைச்சருக்கு எதிரான இந்த நடவடிக்கை ஐக்கிய தேசிய கட்சியினதும், ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியினதும் சதி என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் கூறியுள்ளார்.
தமிழரசு கட்சியை இரண்டாக பிளவுபடுத்திம் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஆதரவாக பொது அமைப்புக்களின் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று இன்று மாலை இடம்பெற உள்ளதாக எமது செய்தியாளர் கூறினார்.
அதேவேளை கட்சி உறுப்பினர்களின், முதலமைச்சருக்கு எதிரான நடவடிக்கைக்கு கட்சி ஆதரவு வழங்கும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

Post a Comment
Post a Comment