கடந்த சில ஆண்டுகளுகளாக, அக்கரைப்பற்று அந்நுார் அமைப்பானது, கடந்த ஒரு தசாப்த காலமாக ஸக்காத்துல் பித்ர் இனைச் சிறப்பாகச் செயற்படுத்தி வருகின்றது.
அந்தவகையில், அக்கரைப்பற்றில் கடந்த 29 நாட்களாக, பள்ளிவாயல்களிலும், ஏனைய இடங்களிலும் சேகரித்த நிதியினைக், கூட்டாக ஒன்று சேர்த்து அக்கரைப்பற்றிலும், அதன் அயற் கிராமங்களிலும் உள்ளோர்களுக்கு, இஸ்லாம் காட்டிய வழியில் நோன்புப் பெருநாளை எல்லோரும் கொண்டாடும் வகையில் உணவுப் பொதிகளை தயார் செய்து பகிர்ந்தளித்து வருவதைக் காணலாம்.
எல்லாம் வல்ல இறைவன் இவற்றுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும், அருள்பாலிப்பானாக! ஆமீன்


Post a Comment
Post a Comment