பன்னிப்பிட்டிய பாலத்திலிருந்து பாய்ந்த மாணவி



கொழும்பு, பன்னிப்பிட்டிய மேம்பாலத்தில் இருந்து கீழே குதித்த பாடசாலை மாணவி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
11ஆம் தரக் கல்வி பயிலும் மாணவியே இவ்வாறு மேம்பாலத்தில் இருந்து, இன்று காலை குதித்துள்ளதாக பன்னிப்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி, பாலத்தில் இருந்து குதித்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை என, தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணையை மேற்கொண்டுள்ளனர்