மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு சார்பாக மற்றும் எதிராக இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த போராட்டங்களுக்கு தடை விதித்து நீதிமன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மூன்று போராட்டங்களை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
சௌந்தர்ய பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம், அரச தாதி உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக பிக்குமார் ஒன்றியம் ஆகியன இணைந்து இந்தப் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதனால், பொதுமக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படக் கூடும் என, புலனாய்வுப் பிரிவினரால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த பொலிஸார், எனவே இதற்கு தடை விதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார, குறித்த போராட்டங்களுக்கு தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

Post a Comment
Post a Comment