நாட்டில் உள்ள சகல தேசிய பாடசாலை அதிபர்களுக்குமான கூட்டம், எதிர்வரும் 19ஆம் திகதி காலை 9 மணிக்கு, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில், கல்வி அமைச்சின் 4ஆம் மாடியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக, தேசிய பாடசாலைகளுக்கு பொறுப்பான கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.எம்.ஜயந்த விக்கிரமநாயக்க தெரிவித்தார்.
இக்கூட்டத்துக்கு அதிபர்கள் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் எனவும் பிரதிநிதிகளை அனுப்புவதை தவிர்க்க வேண்டும் எனவும், அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்கள் அனைத்தையும் கொண்டுவரும்படியும், கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Post a Comment
Post a Comment