அல்-ராசித்- கேவலமான பஸ் பயணம்



இப்படியும் ஒரு கேவலமான பஸ் பயணம்
==========================

திங்கட்கிழமை:
ஹலோ அல்-ராசித் பஸ்? வெள்ளிக்கிழமை கல்முனைக்கு 2 சீட் புக் பண்ணுறீங்களா?
சீட் இருக்கு. வந்து காசி கட்டி புக் பண்ணிட்டு போங்க.

புக் பண்ணுவதற்கு இதுவரை யாரும் என்னிடம் காசு கேட்டதில்லை. இருந்தாலும் எங்கும் சீட் இல்லை என்ற ஒரே காரணத்துக்காக அங்கு போய் புக் பண்ணிவிட்டு வந்தேன். சீட் நம்பர் 39, 40. டிக்கட் 900/=

வெள்ளிக்கிழமை:
தம்பி, இன்றைக்கு பஸ் நேரத்தோட போகும். சரியா 7 மணிக்கு நீங்க மருதானை ஸாஹிரா கிட்ட நிற்கணும்.

இன்று ஒரு இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, சாப்பாட்டுக்கும் நிற்காமல் 7 மணிக்கு பஸ் என்று, தொழுத கையோடு ஓடி வந்தேன்.

அங்கு போய் நிற்கிறேன் பஸ் வரவில்லை. 7.20 ஆ மணிக்குத்தான் பஸ் அங்கு வந்தது. அந்த இடத்தில் பஸ்ஸை அங்கும் இங்கும் ஓடி ஒரு 10 நிமிசம் அலைக்கழித்தான்.

அது ஒரு பழைய A/C பஸ். முகத்தை சுழித்துக்கொண்டு ஒரு மாதிரியா உள்ளே எறினேன். நான் நினைத்தேன் கொஞ்சம் பின்னாடிதான் 39, 40 சீட் இருக்கும் என்று. ஏனென்றால் இதற்குமுன் இந்த அல்-ராசித் பஸ்ஸில் பயணித்ததே இல்லை. இதுதான் கடைசி சீட்டில் பயணிக்கும் என் முதல் பயணம்.

கொஞ்ச நேரத்தில் பஸ் நடத்துனர் வந்தார். உங்களுடைய சீட் 40, 41 என்றார். நான் இல்லை 39,40 என்றேன். கடைசியாக என்னுடன் கூட வரும் Abdur Rahman பரவாயில்லை என்று 41இல் அமர்த்துகொண்டான்.

நேரம் 8 மணி. இன்னும் பஸ் நகரவில்லை. 8.30 - பஸ் எடுக்கிறீங்களா? இல்லை சாப்பிட்டு வரட்டா? நோன்பு திறந்து நாங்கள் இன்னும் சாப்பிடவில்லை. பசிக்கிறது என்றேன். இல்லை பொறுங்க தம்பி... இப்ப பஸ் எடுத்திடுவோம்.

வெளியே வந்த பஸ் 200 மீற்றர் சென்று மருதானயில் நிற்கிறது. இன்னும் சிலருக்காக் காத்து நிற்கிறது. மணி 8.45 தாண்டியும் நிற்கிறது. பொறுமை எல்லை மீறப் பார்க்கிறது.

நேரம் 8.50 மணி. பொறுமை கடந்துவிட்டது. எல்லோரும் வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டு இருந்தார்கள். 7 மணிக்கு எங்களை வரச்சொல்லிவிட்டு, இப்போ 9 மணியாகுது. இப்போ பஸ்ஸ எடுக்கப் போறீங்களா இல்லையா என்று பலமாக கேட்டோம் நாங்கள் இருவரும். செவிடன் காதில் ஊதிய சங்குபோல நடத்துனர் நின்று கொண்டிருந்தான்.

ஆக்களை ஏத்தி காசு அப்புறமா உழைச்சுக்கலாம். இப்போ பஸ் எடுக்கபோறீங்களா இல்லையா என்று சத்தமாக கேட்டேன். தன்பக்கம் பிழை இருப்பதை உணர்ந்துகொண்டவன் அமைதியாக இருந்தான். உங்களைத்தான் கேட்கிறேன் என்றேன்.

இல்ல... ஆக்கள் வர கொஞ்சம் லேட் ஆகிட்டு... அதான்... என்று இழுத்தான். இது கொஞ்சம் லேட்டா? 7 மணிக்கு வரச்சொல்லி.... நான் சாப்புடவும் இல்ல. 9 மணிக்கு போற எண்டா ஏன் 7 மணிக்கு வரச் சொன்ன, 9 மணி எண்டா நாங்க நல்லா சாப்புட்டு வந்திருப்போமெ என்று சொன்னதுக்கு பதில் இல்லாமல் நகர்கிறான் அந்த சாரதி.

கடைசியாக 9 மணிக்குத்தான் பஸ் புறப்பட்டது. பலரும் உள்ளே இருந்து திட்டிக்கொண்டிருக்க பஸ் பயணித்துக்கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் A/C நிறுத்தப்பட்டது. எல்லோரும் கூச்சலிட்டார்கள். பம் பழுதாகிவிட்டது. A/C வேலை செய்யாது என்றான். மறுபடியும் எல்லோரும் திட்டிக்கொண்டிருக்கின்றனர்.

பயணிகளை ஏற்றிய பின்னர் அவர்களிடம் பணம் அறவிட்டுத்தான் எரிபொருள் நிரப்பபட்டது. (பயணிகளை ஏற்றிக்கொண்டு எரிபொருள் நிரப்புவது தடை செய்யப்பட்ட ஒரு செயல்)

சாதரணமாக 9 மணிக்கு பயணிக்கும் பஸ் அடையும் தூரத்தைக்கூட இந்த அல்-ராசித் பஸ் அடையவில்லை. சஹர் செய்வதற்கு வீட்டுக்குப் போகலாம் என்ற கனவில் மண் அள்ளிப்போட்டுவிட்டான்.

ஒரே நேரத்தில் பயணிக்கும் அல்-ராசிதின் 6 பஸ்களும் ஒரே கடையில் (கமிசனுக்காக) நிறுத்தப்படுகின்றன. 6 பஸ் பயணிகள் ஒரே கடைக்குள் புகுந்தால் எப்படி இருக்கும்? காசுக்காக என்னவெல்லாம் செய்கிறான் இந்த அல்-ராசித் பஸ்காரன் 😡

அல்-ராசித் பஸ் இனிமேல் எனக்கு ஹராமாக்கபட்டுள்ளது.
Boycott Al-Rashith Bus 🚌