-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
நோன்பு கால விடுமுறையின் பின்னர், சகல முஸ்லிம் பாடசாலைகளும் கல்வி நடவடிக்கைகளுக்காக இன்று (28) மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன என, கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளும் புனித ரமழான் நோன்பு விடுமுறைக்காக கடந்த மே மாதம் 27ஆம் திகதி முதல் நேற்றுவரை (27) மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி, அட்டாளைச்சேனை அரசினர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, தர்கா நகர் தேசியக் கல்விக் கல்லூரி என்பனவும் இன்று ஆரம்பிக்கப்படுகின்றது.


Post a Comment
Post a Comment