அடையாள வேலை நிறுத்தம்



தபால் தொழிற்சங்கங்கள் இன்று நள்ளிரவு முதல் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவந்துள்ளது. 

தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டிடத்தில் சுற்றுலா ஹோட்டலை நடத்த தீர்மானித்தமை மற்றும் நிர்வாக பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வு வழங்கப்படாமை போன்றவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

இதற்கமைய, இன்று நள்ளிரவு முதல் 48 மணித்தியாலங்களுக்கு இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தபால் தொழிற்சங்க முன்னணி குறிப்பிட்டுள்ளது. 

மேலும், இதற்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடில் எதிர்வரும் 26ம் திகதி முதல் தொடர் வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்