(க.கிஷாந்தன்)
நாடு முழுவதும் உள்ள தபால் காரியாலயங்கள் 13.06.2017 அன்றும் 14.06.2017 அன்றும் மூடப்பட்டு தபால் திணைக்களத்திலுள்ள சகல ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்திலும் தபால் காரியாலயங்களில் உள்ள ஊழியர்களும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டிருந்தனர். இதனால் தபாலுடன் தொடர்புடைய பல்வேறு சேவைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. மலை யக பகுதிக்கு வருகை தந்த தபால் கடிதங்கள் மற்றும் பொதிகள் போன்றன தேங்கி கிடந்தன.
நுவரெலியா, கண்டி, காலி ஆகிய தபாற்காரியாலயங்களை உல்லாச பயணதுறைக்கு பயன்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்னும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
நாடு முழுவதிலுமுள்ள பிரதான தபால் காரியாலயம், உப தபால் காரியாலயம், மலையக தபால் காரியாலயம் உட்பட சுமார் 5000 ஆயிரம் தபால் காரியாலயங்கள் இந்த போராட்டத்தினால் மூடப்பட்டுள்ளன. இதனால், நாட்டில் தபால் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன.
தபால் ஊழியர்களின் கூட்டு தொழிற் சங்கங்கள் முன்னணி 12.06.2017 அன்று நள்ளிரவு முதல் இரண்டு நாள் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment