கொழும்பு – திருமலை பஸ் மீது கல்வீச்சு



கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை கிண்ணியா டிப்போவுக்கு சொந்தமான பஸ் மீதே நேற்றிரவு கலேவெல பகுதியில் வைத்து கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கிண்ணியா டிப்போ பொறுப்பதிகாரி எம். பறூஸ் டெய்லி சிலோனுக்கு தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து நேற்றிரவு 10 மணிக்கு திருகோணமலை நோக்கி புறப்பட்ட பஸ் மீதே இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதலால் எவருக்கு காயம் ஏற்படவில்லை எனவும் பஸ் வண்டியின் முன்பக்க கண்ணாடி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த கிண்ணியா டிப்போ பொறுப்பதிகாரி சாரதியின் பக்கம் கல் வீசப்பட்டிருந்தால் சாரதி பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் என தெரிவித்தார்.