கொஸ்கம வர்த்தக நிலையமொன்றில் தீ



கொஸ்கம நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றில் தீ பரவியுள்ளது.
தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கு அவிசாவளை தீயணைப்புப் பிரிவின் 2 வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் கொழும்பு – அவிசாவளை பிரதான வீதியூடான போக்குவரத்து கொஸ்கம சந்தி வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.