ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் இளைஞர் விவகாரங்களுக்கான புதிய பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகப் பணியாற்றிய, ஜயத்மா விக்ரமநாயக்கவுக்கு (வயது 27) ஜனாதிபதி மைத்திரிபால தன்னுடைய வாழ்த்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகைக்கு நேற்று (27) அழைத்த ஜனாதிபதி, இந்த நியமனமானது நாட்டின் கௌரவத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவர், இலங்கை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். இளைஞர் அபிவிருத்தி தொடர்பான பல வேலைத்திட்டங்களில் இணைந்து பணியாற்றியுள்ள இவர், 2013ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை, இலங்கை இளைஞர் நாடாளுமன்றத்திலும் அங்கம் வகித்துள்ளார்.


Post a Comment
Post a Comment