முஸ்லிம் கடைகளுக்கு “தீ” வைத்தவர் கைது



மஹரகம பகுதியில் முஸ்லிம் வர்த்தகர்களின் வியாபார நிலையங்களை இலக்கு வைத்து நாசகார வேளைகளில் ஈடுபட்டு வந்த நபர் இன்று மாலை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள லெதர் கடை ஒன்றுக்கும், இன்று மஹரகம நகரில் உள்ள பாதணிகள் விற்பனை நிலையம் ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது. குறித்த இரு சம்பவங்களின் CCTV காட்சிகளின் உதவியுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை அண்மையில் மஹரகம பிரதேசத்தில் தீ வைக்கப்பட்ட நான்கு முஸ்லிம் வர்த்தகர்களுக்குச் சொந்தமான வியாபார நிலையங்களுக்கும் தீ வைத்தவர் குறித்த நபர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.