கொள்கையிட்ட பொலிசார், கைது



இடி தாங்கி, தங்க நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் அனர்த்தங்கள் பேரில் மேலும் 3 பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை பொலிஸில் பணியாற்றிய பொலிஸ் அதிகாரிகளே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது. 

கொழும்பு- தெற்கு சட்ட வலுவூட்டல் பிரிவின் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன. 

கைது செய்யப்பட்ட 3 பொலிஸ் அதிகாரிகளும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே சில பொலிஸ் அதிகாரிகளும், இதர உத்தியோகத்தர்களும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது