(க.கிஷாந்தன்)
நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமான நிலையில் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சிறுமியின் உயிரிழப்பால் ஆத்திரமுற்ற பொதுமக்கள், கனரக வாகனத்துக்கு தீ வைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி சென்ற கனரக வாகனமே இவ்வாறு தீ வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் 15.06.2017 அன்று காலை 7.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நானுஓயா நகரத்திலிருந்து பொலிஸ் வழியாக நானுஓயா ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த ஆக்காஷா தேவ்மிணி என்ற 6 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுமி உயிரிழப்புடன் சம்பவ இடத்தில் கலவரம் ஏற்பட்டதனால் பதற்ற நிலை நிலவி வருகின்றது. எனினும் இதனை கட்டுப்பட்டுத்துவதற்கு விசேட அதிரடி படையினர், பொலிஸார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தினால் அட்டன் நுவரெலியா ஊடான பொது போக்குவரத்து பல மணி நேரம் முற்றாக தடைப்பட்டள்ளன.



Post a Comment
Post a Comment