பாணமைவாசி யானை தாக்கிப் பலி



-வி.சுகிர்தகுமார்- 
பாணமை, வெதகல வயல்வெளியில் திங்கட்கிழமை (26) காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர்  மரணமடைந்துள்ளார்.
பொத்துவில், சென்றல் பகுதியைச் சேர்ந்த  டபிள்யூ.குணபால (வயது 70) என்பவரே  மரணமடைந்துள்ளார்.
உடனடியாக பாணமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், மேலதிக சிகிச்சைக்காக அம்பாறை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லும்  வழியில் மரணமடைந்துள்ளார் என, வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.