கிளாசோ தோட்ட மத்தியபிரிவில் மண்சரிவு



நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்ட மத்தியபிரிவில் ஏற்பட்ட மண்சரிவினால் 2 வீடுகளை சேர்ந்த 12 பேர் தங்களின் உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர்.

கடந்த 2ம் திகதி இரவு அப்பகுதியில் பெய்த கடும் மழையினால் வீட்டின் பின்புறத்தில் கட்டப்பட்டிருந்த மதில் சரிந்து விழுந்து இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக இவ்வீடுகளில் இருந்த பெறுமதிமிக்க தொலைக்காட்சி பெட்டி மற்றும் தளபாடங்கள் உணவு சமைப்பதற்கான பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் என அனைத்தும் சேதமாகியுள்ளது.

இதேவேளை மண்சரிவு காரணமாக வீட்டின் சுவர்கள் எல்லா பகுதிகளிலும் பாரிய வெடிப்புற்று காணப்படுவதுடன், சுவர்களும் சரிந்து விழ கூடிய ஆபத்தான நிலையில் உள்ளமை குறிப்பிடதக்கது.

மேலும் அப்பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும் இதனை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை இலங்கை மின்சார சபை முன்னெடுத்து வருகின்றது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம் உணவு பொதிகளை வழங்கி வருகின்றனர்.

பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட அதிரடி படை உள்ளிட்ட பலர் வருகை வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். அத்தோடு தோட்ட அதிகாரிக்கு குறித்த குடும்பத்தை சார்ந்தவர்கள் தகவல் வழங்கியதோடு, தோட்ட நிர்வாகம் பாதிக்கப்பட்ட மக்களுடைய விடயத்தில் அசமந்த போக்கில் இருப்பதாக இவர்கள் தெரிவித்தனர்.