-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, சம்மாந்துறை பிரதேசத்தில் கடந்த மே 28ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் படுகாயமடைந்து அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதுடைய நபர் ஒருவர், இன்று சனிக்கிழமை (10) அதிகாலை 03.00 மணியளவில் சிகிச்சை பலனின்றி, உயிரிழந்துள்ளதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்மாந்துறை - கருவாட்டுக்கல் 12ஆம் பிரிவைச் சேர்ந்த யூசுப்லெப்பை இப்றாலெப்பை (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் விழுந்ததனாலேயே இவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக, பொலிஸார் தெரிவித்தனர்.


Post a Comment
Post a Comment