வௌ்ளம் மற்றும் மண்சரிவு அனர்த்தங்கள் காரணமாக, பாடசாலை புத்தகங்கள் மற்றும் உடமைகளை இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தங்களை வழங்கும் நடவடிக்கை, இன்று (07) ஆரம்பமாகவுள்ளதாக, கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக கல்வி அமைச்சில் புதிய புத்தகங்களை மேலதிகமாக அச்சிடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளனவென, அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவாவித்தான தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டிற்கு அமைய இப்புத்தகங்கள் வழங்கப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment