பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முறிகள் கொடுக்கல் வாங்கல்களுடன் தொடர்புடைய வரையறுக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் தனியார் நிறுவனம் மற்றும் அதனுடன் இணைந்த இரண்டு நிறுவனங்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.
இந்த மனுக்கள் தங்கள் நிறுவனங்களின் கொடுக்கல் வாங்கல்களை மட்டுப்படுத்தும் வகையில் மத்திய வங்கியின் நிதிச் சபை கடந்த வருடம் நவம்பர் மாதம் 07ஆம் திகதி விதித்திருந்த கட்டளையை இரத்து செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
மனுதார்களான நிறுவனங்கள் சரியான முறையில் கூட்டுத்தாபன வரம்பிற்குள் உள்ளடக்கப்படவில்லை என சட்டமா அதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதனை ஏற்றுக்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் ரோஹினி வல்கம உள்ளிட்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், மனுவை நிராகரிப்பதாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்


Post a Comment
Post a Comment