பெண்ணொருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டி கொலை



கொட்டாவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொரண வீதியில் வீடொன்றில் பெண்ணொருவர் கூர்மையான ஆயுதங்களால் வெட்டி கொல்லப்பட்டுள்ளார். 

குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

ஆலோகா எனப் பெயருடைய 26 வயதான பெண்ணே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சட்ட விசாரணைகளின் பின்னர் சடலம் ஹோமாகம மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

மரண விசாரணைகள் இன்று (23) இடம்பெவுள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.