காசல்ரி நீர்த்தேக்கத்தில் கழிவுகள் கொட்டப்படுகின்றன



(க.கிஷாந்தன்)

மலையகத்தில் காணப்படுகின்ற நீர் மின் உற்பத்தி நிலையங்களுக்கு நீர் வழங்கும் பிரதான நீர் தேக்கங்களில் ஒன்றான காசல்ரீ நீர்த்தேக்கத்தில் கழிவுகள் இனந்தெரியாதவர்களால் கடந்த சில நாட்களாக இரவு வேளை நகரங்களில் சேர்க்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதாக பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

காசல்ரி நீர்தேக்கத்தின் சமர்வெளி பகுதியில் கொட்டப்பட்ட குப்பைகள் நீரில் கலந்துள்ளதனால் நீர்வாழ் உயிரினங்கள் இறக்கும் அபாயத்தினை எதிர்நோக்கியுள்ளன.

அத்தோடு பொலித்தீன் பைகளில் அடைக்கப்பட்ட பாரமான குப்பைகள் இதனுள் காணப்படும் நீர்த்தேக்கத்தில் சகதியினுள் புதையுண்டு மீத்தொட்டுமுள்ள குப்பை மேட்டில் ஏற்பட்ட வெடிப்பு போல் வெடிப்பேற்பட்டால் நீர்தேக்கத்தின் அணைக்கட்டு உடைக்கப்பட்டு பாரிய ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போது கொட்டப்பட்டுள்ள குப்பைகளில் பிளாஸ்ரிக் போத்தல், கேன்கள், போன்றன நீர்தேக்த்தின் பல இடங்களில் நிறைந்து காணப்படுக்கின்றன.

இக்குப்பைகள் காரணமாக இங்குள்ள நன்நீர் மீன்பிடியில் ஈடுபட்டுள்ள மீனவ குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாகும் நிலை உருவாகி வருவதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்குப்பைகள் காரணமாக எதிர்காலத்தில் நீர் மின் உற்பத்தி பாதிக்கும் நிலைக்கும் தள்ளப்படும் நிலை உருவாகுமெனவும் இக்குப்பை கொட்டுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பொது மக்கள் சுட்டி காட்டுகின்றனர்.

எனவே உடனடியாக குப்பைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக்கொடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.