நேற்றைய தினம் மாணவர் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் சுகாதார அமைச்சிற்குள் பலவந்தமாக நுழைந்தமையால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மதிப்பீடுகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜானக்க சுகததாஸ தெரிவித்துள்ளார்.
அமைச்சின் வளாகத்தினுள் நுழைந்த மாணவர்களுக்கு தன்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கிய போதிலும் அதற்கு மறுப்புத் தெரிவித்து பலவந்தமாக மாணவர்கள் கட்டிடத்தினுள் பிரவேசித்ததாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.
மாணவர்கள் அமைச்சின் வாகனங்கள் சிலவற்றை சேதப்படுத்தியுள்ளதுடன் அலுவலக உபகரணங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


Post a Comment
Post a Comment