தெமட்டகொடயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் தீக்கிரை



தெமட்டகொட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று வாகனங்கள் இன்று காலை தீக்கிரையாகின.
இரண்டு கார்களும் வேனொன்றும் தீக்கிரையானதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தீ விபத்தினால் உயிர்சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றில் தீ ஏற்பட்டதை தொடர்ந்து அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களுக்கும் தீ பரவியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.