பணிப் பகிஷ்கரிப்பு



காலை 08.00 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

சயிட்டம் நிறுவனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் தாக்குதலைக் கண்டித்துமே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

நேற்திறைய தினம் சயிட்டம் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டதில் சுமார் 80 பேர் வரை பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.