கரையோர ரயில் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.
களுத்தறை மற்றும் பயாகல ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையில் எரிபொருள் ஏற்றிச் செல்லும் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக செயலிழந்துள்ளது. இதன்காரணமாகவே இந்த தடை ஏற்பட்டுள்ளதாக அப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால், காலியிலிருந்து வரும் ரயில்கள் யாவும் பயாகல வரையிலும், கொழும்பிலிருந்து வரும் ரயில்கள் களுத்தறை வரையிலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
பயணிகளின் அசௌகரியங்களைக் கருத்தில் கொண்டு, பயாகல-களுத்தறை என்பவற்றுக்கிடையில் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.


Post a Comment
Post a Comment