வெற்றி பெற்றால் மாத்திரமே அரையிறுதி என்ற கட்டாயத்தில் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்றையப் போட்டியில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கை அணி சற்று முன்னர் வரை 27 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து 138 ஓட்டங்களை பெற்றிருந்தது.
சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்றைய தீர்மானம் மிக்க போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
சோபியா கார்டின்ஸ் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் இலங்கை அணியின் முதல் விக்கெட் 26 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட்டது.
இந்திய அணிக்கு எதிரான கடந்தப் போட்டியில் 76 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றிக்கு பங்காற்றிய தனுஸ்க குணதிலக்க 13 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து வெளியேறினார்.
ஜூனைட்கான் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.


Post a Comment
Post a Comment